இடிந்து விழுந்தது சங்கிலியன் மன்னனது மந்திரிமனை!

0
11

யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரிமனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலியன் மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டது. அதையடுத்து அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன. அந்தக் கம்பிகள் திருட்டுப் போயிருந்த நிலையிலையே இன்று மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானி காலத்துக்குரியதாகக் கருதப்படும் மந்திரிமனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011 ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here