பண்டிகைக் காலத்தில் இணையம் ஊடாக பண மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
சில பரிசுகளை வென்றதாகக் கூறி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பண மோசடி செய்ததாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில முறைகேடுகள் நடப்பதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான அழைப்புகள் மற்றும் சம்பவங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு பொதுமக்கள் விசேட கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.