வாழைப்பழ தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.வாழைப்பழம் கொண்டு கொதிக்க வைக்கப்பட்டு தயாரிக்கப்படும் தேநீரில், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
ஒரு முழு வாழைப்பழத்தை சூடான நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.அதன் பிறகு இந்த வாழைப்பழத்தை எடுத்து விட்டு, அதனுடன் இலவங்கப் பட்டை மற்றும் தேன் சேர்த்து கலக்கினால் சுவையான வாழைப்பழ தேநீர் தயார்.
இந்த தேநீரில் சுகாதார நன்மைகள் அதிகம் உள்ளன.
தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் வாழைப்பழ தேநீர் குடிப்பதால் நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.
Banana Tea
வாழைப்பழ தேநீரில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இருப்பதால், இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
வாழைப்பழ தேநீரில் சர்க்கரையின் அளவு குறைவாக உள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பானமாக உள்ளது.
வாழைப்பழ தேநீரில் காணப்படும் டோபமைன், கேலோகேடசின் போன்ற கரையக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட பிரச்சனைகளை தடுக்க பயன்படுகிறது.
இந்த தேநீர் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதோடு, எலும்பு வலிமையை அதிகரிக்கவும் செய்கிறது.