நாட்டில் இதுவரை எந்தவொரு எரிவாயு சிலிண்டர்களும் வெடிக்கவில்லையென பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
எரிவாயு அடுப்பைத் தவிர எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கக்கூடிய சாத்தியக் கூறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். எரிவாயு கலவையில் பிரச்சினை இல்லை. ஆனால், எரிவாயு அடுப்பில்தான் பிரச்சினை இருக்கின்றது. ஆகவே, எரிவாயு சிலிண்டர்களில் கவனம் செலுத்துவது போன்று எரிவாயு அடுப்புகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.