இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ன் ஏலத்திற்கான வீரர்கள் பட்டியல் வெளியீடு!

0
162

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ன் ஏலத்திற்கான வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் 2024ஆம் ஆண்டிற்கான ஏலம் டிசம்பர் 19, 2023 அன்று, துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் ஏலத்தில் 333 கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

214 பேர் இந்தியர்கள் மற்றும் 119 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர். அதிகபட்சமாக 10 அணிகளிலும் 77 இடங்கள் காணப்படுகின்றன. 77 இடங்களில் வெளிநாட்டு வீரர்களுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

1.5 கோடி ரூபாய் அடிப்படை விலையுடன் 13 வீரர்கள் ஏலப் பட்டியலில் உள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணி 38.15 கோடி ரூபாவுடன் அதிக ஏல பணத்தொகையை கொண்டுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 13.15 கோடி ரூபாவுடன் குறைந்த ஏல பணத்தொகையை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here