இந்தியாவின் தேசிய விமான சேவையான ‘எயார் இந்தியா’ நிறுவனத்தினுடைய வலைத்தளத்தின் மீது இணையவழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் 45 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டின் பெப்ரவரி மாதம் வரை குறித்த விமான சேவையின் ஊடாக பயணித்தவர்களின் விபரங்கள் இணைய வழி ஊடுறுவல் மூலமாக திருடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த விமான சேவையினை அடிக்கடி பயணித்தவர்களின் பெயர், விபரங்கள் மற்றும் கடனட்டையின் இரகசிய இலக்கங்கள் என்பனவும் திருடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எயார் இந்தியா நிறுவனம் மட்டுமன்றி, மலேசியா எயார்லைன்ஸ், சிங்கப்புர் எயார்லைன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தரவுகளும் திருடப்பட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த விமான சேவை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.