தரமான முறையில் முட்டைகள் சேமிக்கப்படாத காரணத்தினால் அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படும் முட்டைகள் ஏற்கனவே காலாவதியாகியுள்ளது
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 70 இலட்சம் முட்டைகள் காலாவதியாகவுள்ளன.எதிர்வரும் 9ஆம் திகதிக்கு பின்னர் இந்த முட்டைகள் காலாவதியாகவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம். சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.
தரமான முறையில் முட்டைகள் சேமிக்கப்படாத காரணத்தினால் அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படும் முட்டைகள் ஏற்கனவே காலாவதியாகியுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதன்படி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு சாதாரண சூழலில் விற்பனை செய்யப்பட்டால் அவை மூன்று நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
இருப்பினும், அந்த முட்டைகளை இரண்டு முதல் ஐந்து டிகிரி சென்டிகிரேட் வரையிலான குளிர் சேமிப்பில் மூன்று மாதங்களுக்கு வைக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
வெளியே எடுத்து விற்பனை செய்த பிறகு, நுகர்வோர் அந்த முட்டைகளை மூன்று நாட்களுக்குள் உட்கொள்ள வேண்டும் எனவும் இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய 18 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.