திருச்சியில் இருந்து குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் தொடருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொடருந்து குஜராத் மாநிலத்தின் வால்சத் ரயில் நிலையம் சென்றுள்ளது.அங்கிருந்து சென்ற சில நிமிடங்களிலேயே தொடருந்தின் ஜெனெரேட்டர் பெட்டியில் தீ பிடித்த நிலையில் தொடருந்தானது உடனடியாக நிறுத்தப்பட்டது.
அதேவேளை தொடருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் எந்த வித ஆபத்துமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.அத்தோடு தொடருந்தின் ஏற்பட்ட தீப்பரவலும் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த ஹம்சாஃபர் எக்ஸ்பிரஸ் தொடருந்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு மின்கசிவு தான் காரணம் எனவும் கூறப்படுகிறது.