இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஓமிக்ரோனின் புதிய வகை!

0
161

இந்தியாவில் ஓமிக்ரோனின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்தாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெட்ரேயஸ் கூறியதாவது,

கொரோனா தொற்று கடந்த இரண்டு வாரங்களில் உலகளவில் பதிவான எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் பிஏ.4 மற்றும் பிஏ.5 அலைகள் எழுந்துள்ளன. இந்தியா போன்ற நாடுகளில் ஏபி.2.75 என்கிற புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு புதிய வைரஸ் தோன்றினால் அது முந்தையதைவிட மிகவும் வித்தியாசமாகத் தோன்றினால் அது தனி மாறுபாடு என்று அழைக்கப்படும். நாம் இன்னும் தொற்றுநோய்க்கு மத்தியில் இருக்கிறோம்.

வைரஸூக்கு நிறைய சக்தி உள்ளது. எனவே அது பிஏ.4 அல்லது பிஏ.5 அல்லது பிஏ.2.75 ஆக இருந்தாலும், வைரஸ் தொடரும்.

அதனால், மக்களும் சமூகங்களும் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டத்தைத் தவிர்க்க வேண்டும். மக்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here