இந்தியாவில் கோடிகளை அள்ளிய ‘ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்’.

0
62

உலகளவில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் ‘ஜுராசிக் வேர்ல்ட் – ரீபெர்த்’. இந்தியாவில் ஜூலை 4-ம் திகதி வெளியானது இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான இப்படம் இந்தியாவில் மொத்த வசூலில் இந்திய மதிப்பில் ரூ.100 கோடியை கடந்திருக்கிறது. இது இலங்கை மதிப்பில் 350 கோடி ரூபாய் ஆகும்.

அத்துடன் பிராட்பிட் நடித்த ‘எஃப் 1’ இந்தியாவில் நல்ல வசூல் செய்து வருகின்றன. குறிப்பாக ‘எஃப் 1’ திரைப்படம் ஐமேக்ஸ் திரையரங்குகளில் தொடர்ச்சியாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது. ஏனைய மொழிகளில் வெளியான படங்கள் எதுவுமே பெரிய அளவுக்கு வசூலில் வரவேற்பைப் பெறவில்லை.

தமிழில் ‘மாமன்’ படத்துக்குப் பிறகு எந்தவொரு படமும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் அனைத்து திரையரங்க உரிமையாளர்களு ஆகஸ்ட் 14-ம் திகதி வெளியாகவுள்ள ‘கூலி’ படத்துக்காக காத்திருக்கிறார்கள். அப்படம் கண்டிப்பாக பெரியளவில் வசூல் இருக்கும் என்பது அனைவருடையஎதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஜுராசிக் வேர்ல்ட் – ரீபெர்த்க்கு பின் வெளியான ‘சூப்பர் மேன்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here