இந்தியாவில் டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று காலை சுமார் 05.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீயை அணைக்க தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுக்கள் பணியாற்றி வருவதாகவும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயிலில் மூன்று எண்ணெய் தொட்டிகள் வெடித்ததால் ஏற்பட்ட எரிபொருள் கசிவைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.