இந்தியாவில் திடீரென கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கடந்த 16ஆம் திகதி இந்திய சுகாதார அமைச்சகம் வௌியிட்ட தரவுகளின் படி, ஒரே நாளில் புதிதாக 339 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 335 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,701 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழ்நாட்டில் மட்டும் நேற்று 20 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்த சுகாதாரத்துறையின் அறிக்கையில், உயிரிழந்தவர்களில் 4 பேர் சமீபத்தில் ஜேஎன்.1 புதிய துணை வகை வைரஸ் கண்டறியப்பட்ட கேரளாவிலும், ஒருவர் மத்தியப் பிரதேசத்திலும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மொத்த மொத்த பாதிப்பு 4.50 கோடியாக (4,50,04,816) உள்ளது. பாதிப்பில் இருந்து இதுவரை 4.46 கோடி பேர் (4,44,69,799) குணமாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.