இந்தியாவின் மேற்கு வங்கத்தில் புதுவகையான வைரஸால் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உலகை முடக்கிப்போட்ட கொரோனா தொற்று சற்று சரியாகி வரும் நிலையில், அடுத்ததாக இந்தியாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் அடினோ வைரஸ் (Adenovirus) எனும் புதிய வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இந்த வைரஸ் அதிகமாக குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் மத்தியில் காணப்படுகிறதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது. அந்தவையில் கடந்த 9 நாட்களில் அடினோ வைரஸ் (Adenovirus) தொற்றால் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் கண்கள், நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் என கூறப்படுகின்றது.
எனவே, குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் போன்ற அறிகுறி இருந்தால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அடிக்கடி கைகளை சோப்பு அல்லது சானிடைசர் பயன்படுத்தி சுத்தம் செய்துக் கொள்ள வேண்டும் படி இந்திய சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.
அதேவேளை அடினோவைரஸ் (Adenovirus) என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் இவைகளை பாதிக்கும் வைரஸ் குழுவாகும்.
பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதோடு அடினோவைரஸ் அதிவேகமாக பரவக்கூடிய தொற்று எனவும் கூறப்படுகின்றது.