ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கினால் இந்தியா மீது குறிப்பிடத்தக்க வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா மீண்டும் அச்சுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய தாக்குதல்களில் எத்தனை உக்ரேனியர்கள் இறந்தாலும் இந்தியா கவலைப்படுவதில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி அந்த செய்தியில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
2022 இல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததிலிருந்து பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளன. இது ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.