இலங்கை ஒருநாள் மற்றும் இருபது 20 அணிகளின் முன்னாள் தலைவர் குசல் ஜனித் பெரேராவுக்கு, இந்திய அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்துடனான தொடரில் உபாதைக்கு உள்ளான அவர், குணமடையாத காரணத்தினால் இந்த நிலைமை ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.
நேற்று இடம்பெற்ற பயிற்சி ஆட்டத்திலும் குசல் ஜனித் பெரேரா பங்கேற்றிருக்கவில்லை.
இந்த நிலையில், அவரின் உடல்நிலை குறித்து, வைத்தியர்கள் கண்காணித்து வருவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றது.