இந்தியா – அமெரிக்கா இடையே 10 ஆண்டு இராணுவ ஒப்பந்தம்!

0
13

இந்தியா – அமெரிக்கா இடையே, 10 ஆண்டுக்கான இராணுவ ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பென்டகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : “இரு நாட்டு இராணுவ அமைச்சர்களும் அடுத்த சில மாதங்களில் நேரடி சந்திப்பு நடத்த உள்ளனர்.

அப்போது, அடுத்த 10 ஆண்டுக்கான அமெரிக்க – இந்திய இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டனர். தெற்காசியாவில், அமெரிக்காவின் முதன்மையான இராணுவ கூட்டாளி இந்தியா என அமைச்சர் ஹெக்சேத் கூறினார்.

பெப்ரவரியில் இடம்பெற்ற , அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி சந்திப்பில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை பூர்த்தி செய்யும் பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்காவின் இராணுவ தளவாட விற்பனை, இராணுவ தொழில் ஒத்துழைப்பின் கட்டாய தேவை குறித்து விவாதிக்கப்பட்டது.” இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here