இந்தியா அரசாங்கத்தின் நிதியுதவியோடு மலையக பாடசாலைகளை மேலும் அபிவிருத்தி பாதையில் ஈட்டு செல்ல இ.தொ.கா.நடவடிக்கை பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாளயத்தின் கட்டிட திறப்புவிழாவில் ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்புமலையக பெறுந்தோட்ட பாடசாலைகளை கல்வி நடவடிக்கையிலும் அபிவருத்தி பாதையில் முன்னெடுத்து செல்வதிலும் நோக்காக கொண்டு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியை நாடி மேலும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கபட உள்ள தாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் கல்விவலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாளயத்தின் புதிய கட்டிடம் ஒன்றை திறந்து வைத்து பெற்றோர்கள் மத்தியில் உறையாற்றும் போதே இதனை தெரிவித்தார். இந் நிகழ்வின் போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உட்பட மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மறுதபாண்டி ராமேஸ்வரன் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான கணபதிகனகராஜ், பி.சக்திவேல் பிலிப்குமார் நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் கணபதிரவி குழந்தைவேல் மஸ்கெலியா பிரதேசசபை தவிசாளர் கோவிந்தன் சென்பகவல்லி நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் மாடசாமி சரோஜா முன்னால் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர்களான அனுசிய சிவராஜா மற்றும் எஸ்.அருள்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது மேலும் உறையாற்றிய ஆறுமுகன் தொண்டமான் மத்திய மாகண தமிழ் கல்வி அமைச்சுக்கு கிடைக்கபெறுகின்ற நிதி போதாது ஆகவே தான் மலையக பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் அண்மையில் இந்திய அரசாங்கத்தோடு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்ட போது தான் மத்திய மாகாணத்தில் உள்ள ஆறு பாடசாலைகளுக்கு மில்லியன் கணக்கான நிதியுதவிகளை இந்திய அரசாங்கம் வழங்கியிருக்கிறது அதன் அடிப்படையில்தான் இந்த பொகவந்தலாவ எல்பட தமிழ் வித்தியாளயத்திற்கு 35மில்லியன் ரூபா நிதி ஒதுக்கபட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டார்.
இதேவேலை இந்திய உயர்ஸ்தானிகர்ரோடும் நாங்கள் கலந்துரையாடி இருக்கின்றோம் இந்தியாவில் சில ஆசிரியர்களை கொண்டு வந்து இங்குள்ள ஆசிரியர்களுக்கு மேலும் பயிற்சிகளை வழங்கினால் இந்தியாவில் உள்ள ஆசிரியர்களுக்கு நிகராக எமது மலையக பாடசாலைகளில் பணிபுரிகின்ற ஆசிரியர்களும் சிறந்த விளங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)