10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில், வரும் 15-ம் தேதி ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி கொழும்புவில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதால், இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு கூடியது.
டெல்லியில் இருந்து கொழும்பு செல்ல வழக்கமாக ரூ.30,000 செலவாகும் . இருவழிக் கட்டணம், தற்போது ரூ.1 லட்சம் வரை உயர்வு. சென்னையில் இருந்து ரூ.50,000, மும்பையில் இருந்து ரூ.70,000ஆகவும் கட்டணம் நிர்ணயிப்பட்டுள்ளது.