இந்தியா மீது 50 சதவீத வரிவிதிப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஜனநாயகக் கட்சி எம்.பி. எதிர்ப்பு

0
4

ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 சதவீத வரியை அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். இதனால் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான வரி மோதல் சூடு பிடித்துள்ளது. அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு துரதிருஷ்டவசமானது என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கு 50 சதவீத வரியை விதித்தற்காக அமெரிக்காவில் எதிர்க்கட்சியாக செயல்படும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. கிரெகோரி மீக்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறிய​தாவது: இந்த வரி​வி​திப்பு இந்​தி​யா​வும், அமெரிக்கா​வும் பல ஆண்​டு​களாக கட்டி எழுப்பி வந்த உறவை ஆபத்​தில் ஆழ்த்​துகிறது. இந்த கூடு​தலான வரி விதிப்​பு​கள் இந்​தி​யா, அமெரிக்கா இடையி​லான நீண்ட கால உறவை மிக​வும் பாதிக்​கும்.

எந்​தவொரு பிரச்​சினையை​யும் பேச்​சு​வார்த்தை முறை​யிலோ அல்​லது மரி​யாதைக்​குரிய முறை​யிலோ தீர்க்​கப்பட வேண்​டும். ஆனால், கடந்த வாரம் 25 சதவீத வரியை விதித்த அதிபர் ட்ரம்ப், இந்த வாரத்​தில் கூடு​தலாக 25 சதவீத வரியை இந்​தியா மீது விதித்​துள்​ளார். இந்த வரி​வி​திப்​பு​கள் மிக​வும் அதி​க​மாகும். இது சரியல்ல. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தா​ர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here