இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரைச் சமப்படுத்திய இந்திய அணியை சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர்.
சிராஜ் மற்றும் பிரசித் கிருஸ்ணா ஆகியோர் நெருக்கடிகளைச் சமாளித்து அபாரமாகச் செயற்பட்டார்கள் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் போட்டியின் தோல்வி குறித்து கவலை அடைவதாக தெரிவித்துள்ளார்.
அருகில் வந்த வெற்றியைப் பெறமுடியாமல் போனது துரதிஸ்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.