– உத்ர பிரதேசத்தில் உள்ள குஷி நகருக்கு முதலாவது நேரடி விமான சேவையை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்து இந்திய – இலங்கை அரச உயர்மட்ட பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார் –
உத்ர பிரதேசம் குஷி நகருக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து நாளை மறுதினம் புதன்கிழமை புனித போயா தினத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ , தலைமையிலான அரச உயர்மட்ட குழுவினருடன் குஷி நகர் விமான நிலையத்துக்கு முதலாவது சர்வதேச விமானமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தரையிறங்க உள்ளது.
இவ்விஜயத்தின் போது விமானத்துறை அமைச்சர் D.V சாணக்க,தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட அரசின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் இருந்து பயணம் மேற்கொள்ளும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான அரச உயர்மட்ட குழுவினருக்கு செங்கம்பள வரவேற்பை குஷி நகர் விமான நிலையத்தில் அளிக்க உள்ளார். அத்துடன் குஷி நகரிலிருந்து இலங்கைக்கான சர்வதேச விமான சேவைகளையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்காதது, திருமலை எண்ணெய்க் குதங்கள் மற்றும் இருதரப்பு அரச கொள்கைகளில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இலங்கை – இந்தியாவுக்கான உறவு பாலத்தில் ஓரளவு விரிசல் நிலை கடந்த காலத்தில் ஏற்பட்டது.
இந்நிலையில், அண்மைக்காலமாக இந்திய – இலங்கைக்கு இடையிலான வரலாற்று ரீதியான இருதரப்பு இராஜதந்திர உறவை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
குஷி நகருக்கான சர்வதேச விமான போக்குவரத்தை ஆரம்பதில் செந்தில் தொண்டமான் இலங்கை இந்தியாவிற்காக இராஜதந்திர ரீதியாக பல்வேறு பின்புலத்தில் காய்நகர்த்தல்களை மேற்கொண்டதுடன், தமது நட்பு வட்டாரத்தின் ஊடாக இந்த திட்டத்தை வெற்றியானதாக மாற்றியமைக்க அரசாங்கத்துக்கு பெரும் பங்களிப்பை அவர் வழங்கியுள்ளார்.
குஷி நகருக்கான நேரடி விமான போக்குவரத்தின் ஊடாக பௌத்த மக்கள் புத்தகயாவுக்கு தடையின்றி ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள வழிசமைக்கப்பட்டுள்ளதுடன், இந்து மற்றும் ஏனைய மதத்தினரும் ஆன்மீக பயணங்களை மேற்கொள்ளும் இலகுவான வழிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
குஷி நகர் விமான நிலையத்திலிருந்தில் உள்நாட்டு விமான சேவையை மாத்திரமே இந்திய அரசாங்கம் கடந்த காலத்தில் முன்னெடுத்திருந்தது. தாய்லாந்து, வியட்னாம், பூட்டான் என இந்தியாவை சுற்றி பல பௌத்த நாடுகள் உள்ளன. உலகளாவிய ரீதியிலும் சீனா, ஜப்பான் உட்பட பல பௌத்த நாடுகள் உள்ள நிலையில், குஷி நகர் விமான நிலையத்திலிருந்து முதலாவது சர்வதேச விமான போக்குவரத்து இலங்கைக்கு மேற்கொள்ளப்படுவதின் பின்புலத்தில் செந்தில் தொண்டமானின் இராஜதந்திர நகர்வு உள்ளது.
அதேபோன்று இந்திய இராணுவத் தளபதி, இந்திய வெளியுறவுச் செயலாளர் ஆகியோரின் அடுத்தடுத்தான இலங்கை விஜயங்கள் இந்தியா இலங்கை மீது அதிகம் கவனம் செலுத்துகின்றது என்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
மேலும் செந்தில் தொண்டமான ஏற்பாட்டில் சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பா.ஜா. காவின் மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி அவர்கள் பிரதமர் அவர்களின் நவராத்தி விழாவின் போது இரு நாட்டிற்கு இடையிலான ராஜதந்திர உறவு வலுப்படுத்துவது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
கடந்த காலங்களில் சீன அரசு பக்கம் கூடுதலாக சாய்ந்திறுந்த இலங்கை , தற்போது இந்தியா நோக்கி பயணிக்கிறது.
இன்று செந்தில் தொண்டமானின் அரசியல் நகர்வுகள் இலங்கை அரசாங்கம் மற்றும் இந்திய அரச உயர்மட்டத்தினரிடம் முக்கிய இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .