பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்த வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இந்திய அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று அமைச்சில் நடைபெற்றது.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல்துறை முதன்மை செயலாளர் பாணு அம்மையார் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இ.தொ.காவின் உபத் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.
கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு அமைச்சுடன் இணைந்து, பின்தங்கிய பிரதேசங்களை சேர்ந்த வருமானம் குறைந்த குடும்பங்களுக்காக இந்திய அரசின் நிதி உதவியுடன் கீழ் முன்னெடுக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும், ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் செயற்பாடுகள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது ஆய்வு செய்யப்பட்டது.