அஜித் அகர்கர் முன்பு தலைமை தேர்வாளர் குழுவில் இடம் பெற்றிருந்தார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , சுலக்ஷனா நாயக், த அசோக் மல்ஹோத்ரா மற்றும் ஜதின் பரஞ்சபே ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு தேர்வுக் குழுவில் தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை நேர்காணல் செய்தது.
மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு, அஜித் அகர்கரை தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு ஒருமனதாக பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் அகர்கர் முன்பு தலைமை தேர்வாளர் குழுவில் இடம் பெற்றிருந்ததோடு, ஐபிஎல்லில் கடந்த இரண்டு சீசன்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் உதவி பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
மேலும் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய காலத்தில் தனது சிறப்பான பங்களிப்பை பலமுறை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.