இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கோர மறுத்ததால் ஆஸ்திரேலிய செனட்டரின் பதவி பறிப்பு!

0
10

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகத்தை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய செனட்டர் ஜெசிந்தா நன்பிஜின்பா, நிழல் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்திய சமூகத்திடம் மன்னிப்புகோர மறுத்ததையடுத்தே அவரை நிழல் அமைச்சரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே நீக்கியுள்ளார்.

வெளி​நாட்​டினர் அதிக அளவில் குடியேறு​வதற்கு எதி​ராக, நாடு முழு​வதும் ‘மார்ச் பார் ஆஸ்​திரேலி​யா’ என்ற பெயரில் பேரணி மற்​றும் போராட்​டம் நடைபெற்றது.

இவ்வாறானதொரு பின்புலத்தில் லிபரல் கட்சி கட்​சி​யின் செனட்டர் ஜசிந்தா நம்​பிஜின்பா பிரைஸ்,
“பிரதமர் அந்​தோனி அல்​பானீஸ் தலை​மையி​லான லேபர் கட்சி, வாக்கு வங்​கிக்​காக இந்​தி​யர்​களை அதிக அளவில் குடியேற அனு​ம​திக்​கிறது’’ என குற்றஞ்சாட்டி இருந்தார்.

இவரது இந்​தக் கருத்து ஆஸ்​திரேலிய வாழ் இந்​தி​யர்​கள் மத்​தி​யில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவ​காரத்​தில் ஜசிந்தா மன்​னிப்பு கோர வேண்​டும் என அவருடைய கட்​சி​யினர் உட்பட பலர் வலி​யுறுத்தி உள்​ளனர்.

அவர் அதனை ஏற்க மறுத்த நிலையிலேயே நிழல் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

செனட்டர் ஜசிந்தா நம்பிஜின்பா பிரைஸின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகத்திடம் எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்திய சமூகத்தை இலக்கு வைத்து செனட்டர் ஜசிந்தா கருத்து வெளியிட்டு எட்டு நாட்களுக்கு பின்னரே இவ்வாறு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here