இந்திய சமூகத்தை குறிவைத்தால் சர்ச்சையில் சிக்கிய ஜசிந்தா!

0
144

வாக்கு வங்கிக்காகவே பெரும் எண்ணிக்கையிலான இந்திய குடியேறிகளை லேபர் அரசாங்கம் ஏற்கின்றது என எதிரணி செனட்டர் ஜசிந்தா நம்பிஜின்பா பிரைஸ் வெளியிட்டுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இக்கருத்தை ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே கண்டித்துள்ளார்.

அத்துடன், இந்திய புலம்பெயர் சமூகம், ஆஸ்திரேலியாவுக்கு வழங்கிவரும் பங்களிப்பை அவர் பாராட்டி, அது தொடர்பில் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் சில லிபரல் கட்சி அரசியல் பிரமுகர்கள், செனட்டரின் கருத்தை கடுமையாக எதிர்த்துள்ளனர்.

வெளிநாட்டு குடியேற்றத்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிர வலதுசாரிகளால் போராட்டம் நடத்தப்பட்ட பின்புலத்திலேயே, அதனை ஆதரிக்கும் வகையில் செனட்டர் ஜசிந்தா நம்பிஜின்பா பிரைஸ் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் புலம்பெயர் இந்தியர்களிடம் அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுவருகின்றது. லேபர் கட்சியும் குறித்த செனட்டருக்கு எதிராக விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here