இந்திய நன்கொடையினால் வழங்கப்பட்ட வீடமைப்பு திட்டங்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்து தருவதற்கான நடவடிக்கை இன்று கண்டி மாவட்டத்தில் புஸல்லாவ நாயப்பன தோட்டத்தில் நடைபெற்றது .
இதில் நாயப்பன கீழ்பிரிவு நாயப்பன மேற்பிரிவு தோட்டங்களில் அமைந்துள்ள வீடமைப்புகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் அதாவது பாதை , குடிநீர் , மின்சாரம் போன்றவற்றினை வழங்குவதற்காக 14 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதித் தொகை அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்களின் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சினாடாக வழங்கப்பட்டு , இன்று இவ் வேலைத்திட்டமானது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் , பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகமுமாகிய பாரத் அருள்சாமி , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் திரு செல்லமுத்து , பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் . எல்பிட்டிய பெருந்தோட்ட யாக்கத்தினுடைய பிரதி முகாமையாளர் மற்றும் பிரதேச பொதுமக்கள் முன்னிலையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது .
இதன்போது கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி
கடந்தகாலங்களில் இப்பிரதேசத்துக்கு வீடமைப்பினை தந்தமைக்கு பிரதேச பொதுமக்கள் சார்பாக இந்திய அரசுக்கு நன்றிகளை தெரிவித்தார் . மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் இந்திய – இலங்கை வீடமைப்பு திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வீடுகளை இந்திய அரசும், உட்கட்டமைப்பு வசதிகளை இலங்கை அரசும் செய்வதாகவே இருந்தது .
ஆனால் துரதிஸ்ட்ட வசமாக கடந்த அரசாங்கத்தில் இந்திய அரசினால் வீடுகளை கட்டிக்கொடுக்கப்பட்டபோதும் அதற்கு தேவை அடிப்படையான உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை . இந்த நாயப்பன பிரதேசத்தில் சுமார் இரண்டரை வருடங்களுக்கு மேலாக வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் மக்களால் அங்கு குடியேறுவதற்கான அடிப்படை உட்கட்மைப்பு வசதிகள் எதுவுமே இல்லை . எனவே இதனைக் கருத்தில் கொண்டு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் இந்திய வீடமைப்பின் மொத்த உட்கட்டமைப்பினையும் பூர்த்தி செய்யும் வகையில் கிட்டத்தட்ட 524 மில்லியன் ரூபா நிதித்தொகையினை ஒதுக்கீடு செய்துள்ளார் .அதன் அடிப்படையில் 14 மில்லியன் ரூபா பெறுமதியான உட்கட்டமைப்பு வசதிகளை செய்வதற்கான வேலைத்திட்டமே இன்று ஆரம்பிக்கப்பட்டது .
கடந்த கால வீடுகள் எவ்வாறு எனில் கார் ஒன்று வழங்கப்பட்டிருந்தாலுமே அதற்கான சக்கரமோ அல்லது அதற்கான என்ஜினோ இன்றி பெயரளவில் காணப்பட்டது . ஆனால் இன்று எமது மக்களின் தேவையினையுணர்ந்து எங்களின் கோரிக்கைக்கு அமைவாக அமைச்சர் அவர்களின் நிதியுதவியுடன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நடைபெறுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம் .
அதேநேரம் இவ்வீடமைப்புக்கான உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் அமைச்சினாடாக அவர்களுக்கு சட்டப்படி செல்லுபடியாகக் கூடிய காணியுறுதிப்பத்திரம் வழங்கவுள்ளதுடன் , அவர்களுக்கான சுயதொழில் நடவடிக்கைகளை எமது பிரஜாசக்தி அபிவிருத்தி திட்டத்தினூடாக பெற்றுக்கொடுக்கவும் நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் பாரத் அருள்சாமி தெரிவித்தார் .
இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது எப்போதும் மக்கள் நலன் கருதியே வேலைத்திட்டங்ளை மேற்கொள்ளும் . இதன் அடிப்படையில் கட்டப்பட்டு கைவிடப்பட்ட காணப்படும் பல வேலைத்திட்டங்களை மக்களுக்கு புத்தாக்கம் செய்து மக்கள் பாவனைக்கு கையளிப்பதுடன் எதிர்காலத்தில் இந்திய வீடமைப்பும் சரி , எமது அமைச்சினூடாக கிடைக்கப்பெறும் வீடமைப்பும் சரி துரிதகதியில் இவற்றை பெற்றுப் கொடுக்கும் நடவடிக்கைகளையும் நாம் மலையகம் முழுவதும் எடுத்துள்ளோம் . மேலும் கண்டி மாவட்டத்தில் நாம் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நாம் மேற்கொண்டு வருகின்றோம் 30 மில்லியனுக்கும் அதிகமான வேலை திட்டங்களை எனது வேண்டுகோலின் படி நடைபெற உள்ளது .
அதற்கான அடிப்படை வேலைத்திட்டமே இன்று ஆரம்பிக்கப்பட்டது என மக்களுக்கு தெரிவித்தார் . இந்நிகழ்வில் கண்டி மாவட்டத்திற்கான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பணிமணையின் உத்தியோகத்தர்கள் , அமைச்சு அதிகாரிகள் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் , தோட்ட முகாமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.