இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கடந்த 31 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 21 பேரும் நீதிமன்றின் உத்தரவின் பேரில், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்கள் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதற்கமைய, அவர்கள் மிரிஹான தடுப்பு முகாம் ஊடாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.