உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா நீதிச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
1988 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பதவியேற்ற துரைராஜா, 2019 முதல் உயர் நீதிமன்ற நீதியரசராக பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளி தமிழர் ஒருவர் குறித்த ஆணைக்குழுவில் பதவியமர்த்தப்படுகின்றமை இதுவே முதல்முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.