இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களுக்கு பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடும் தீர்மானம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் ஆகஸ்ட் 24 ஆம் திகதி வரை பாகிஸ்தான் வான்வெளி மூடப்படவுள்ளது.
இந்திய நேரப்படி பிற்பகல் 3:50 மணிக்கு அமுலுக்கு வரும் இந்த முடிவின் மூலம், இந்திய விமானப்படை, ராணுவம் மற்றும் இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது குத்தகைக்கு எடுத்த சிவில் விமானங்களால் இயக்கப்படும் எந்த விமானமும் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த முடியாது.
ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர், இதனால் இந்திய அரசாங்கம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வான்வெளியை மூடியது.
இதற்குபதிலடியாக, பாகிஸ்தான் கடந்த ஏப்ரல் 24 அன்று இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியது.