இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவிற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குமிடையிலான சந்திப்பு இடம்பெற்றது.இதன்போது மலையக மக்கள் முன்னணி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் ஊடாக சீதாலிய கோவிலின் பிரசாதம் வழங்கி வைக்கப்பட்டதோடு நினைவு சின்னமொன்றும் கையளிக்கப்பட்டது.
இதன்போது உலகத்திலேயே சீதைக்கென கோவில் அமைத்துள்ள நுவரெலியா பற்றியும் சீதையம்மன் கோவில் பற்றியும் பிரத்தியேகமாக கலந்துரையாடியதோடு நுவரெலியா சீதையம்மன் கோவிலின் புனருத்தானத்திற்கான நிதியுதவியை இந்திய அரசாங்கத்தின் ஊடாக வழங்குதாக வே.ராதாகிருஸ்ணனிடம் இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்