இந்து பண்பாட்டு நிதியம் உருவாக்கியமைக்கு பாராட்டினை, வருத்தத்தினையும் இலங்கை இந்து குருமார் ஒன்றியம் வெளியிட்டுள்ளது.

0
221

இலங்கை திருநாட்டின் இந்து சமயத்தினை பாதுகாப்பதற்காக இலங்கை அதிமேதகு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் நேற்று (17) இந்து பண்பாட்டு நிதியம் என்ற ஸ்தாபனத்தினை தாபித்துள்ளார் அதற்கு முதற்கண் அவருக்கும் அரசாங்கத்திற்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கும் அதே நேரம் பெரும் எண்ணிக்கையிலான இந்துக்கள் வாழுகின்ற பெரும் எண்ணிக்கையிலான கோயில்கள் காணப்படுகின்ற மலையகத்தைச் சார்ந்த எவரும் அதில் பிரதிநித்துவத்தினை செலுத்தாதையிட்டு பெரும் கவலையினையும் கண்டத்தினை தெரிவிப்பதாக இலங்கை இந்து குருமார் ஒன்றியத்தின் செயலாளரும் அகில இலங்கை இந்து மகா சபா தலைவருமான சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்தார். இன்று (18) கொட்டகலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்…

சைவ சமயத்தின் வளர்ச்சிக்காக நிறுவப்பட்டுள்ள குறித்த அமைப்பில் வடக்கையும் மத்திய கொழும்பினையும் ஆதாரமாக கொண்டே நிறுவப்பட்டுள்ளன. இந்த அமைப்பில் மலையகத்தைச் சார்ந்த அல்லது மலையக சைவ அமைப்புக்களைச் சார்ந்த எவரும் இடம்பெறவில்லை. ஆகவே மலையக சைவ மக்களின் பிரச்சினைகளை, அறநெறி சார்ந்த பிரச்சினைகளை, கோயில்களின் பிரச்சினைகளை உடனடியாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான நிலை இல்லாது போய் உள்ளன.

பெருந்தோட்ட இணைப்பாளராக இருக்கின்ற செந்தில் தொண்டமான் கூட இவ்வமைப்பில் இல்லாது இருப்பது எமக்கு பெரும் ஆதங்கமாக உள்ளது.
மலையக ஆலயங்கள் மற்றும் ஏனைய சைவ சமய தொடர்பான விடயங்கள் மலையக பகுதியில் வாழ்கின்றவர்கள் நன்கு அறிவார்கள் இன்று எத்தனையோ கோயில்கள் நிதியின்றி கட்டப்படாத நிலையிலேயே உள்ளன. சில ஆலயங்களில் நாளாந்த பூசைகள் கூட நடத்த முடியாத நிலை காணப்படுகின்றன எத்தனையோ அறநெறி பாடசாலைகள் இயங்க முடியாத நிலையில் உள்ளன.

சைய சமயம் தொடர்பான எத்தனையோ பிரச்சினைகள் மலையக ஆலயங்களில் காணப்படுகின்றன இந்நிலையில் இந்த அமைப்பு மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரை கூட நியமிக்காது இருப்பதையிட்டு இந்து குருமார்கள் ஒன்றியம் வன்மையாக கண்டிக்கின்றது.

எனவே மலையக சைவம் சார்ந்த பிரச்சினைகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கு பிரதமரின் இணைப்பாளராக உள்ள செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கையிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here