இந்தோனேசியாவின் கிழக்கு நுஸா தெங்காரா மாகாணத்தின் ஃப்ளோரஸ் தீவிலுள்ள லெவோடோபி லகி லகி எனும் எரிமலை நேற்று (20) நள்ளிரவு வெடித்துச் சிதறியுள்ளது.
இன்று காலைவரை எரிமலையானது மொத்தமாக மூன்று முறை வெடித்ததனால் அப்பகுதியில் 8,000 மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் படலம் பரவியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இதனால் பாலிக்கான சில விமான பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டன.
எரிமலையின் வெடித்த பகுதிகளை இந்தோனேசிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
அந்த எரிமலை இருக்கும் மாகாணத்தில் கடந்த சில காலமாக நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் கடந்த 7 நாட்களாக அந்த எரிமலை குமுறி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.