இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை ஓரிரு நாட்களில் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு பேச்சு!

0
15

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை ஓரிரு நாட்களில் நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுவருகின்றது என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அவர்கள் இங்கு வந்த பின்னர் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” கெஹேல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த, பெக்கோ சமன் உள்ளிட்ட ஐந்து பாதாள குழு உறுப்பினர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை பொலிஸார், புலனாய்வு பிரிவினர் இந்தோனேசியா பொலிஸாருடன் இணைந்து கடந்த 7 நாட்களாக கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதற்கு சர்வதேச பொலிஸார், எமது நாட்டு புலனாய்வுப் பிரிவு, இந்திய புலனாய்வு பிரிவு உள்ளிட்டவற்றின் உதவியுடன் அவர்களை கைது செய்துள்ளோம்.

இந்தோனேசிய அரசு மற்றும் பொலிஸார், இலங்கை பொலிஸாருக்கு நன்றிகள்.” – எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஐவரும் சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு இருந்தவர்கள். இவர்களுடன் பெண்ணொருவரும் கைதாகியுள்ளார். மொத்தம் அறுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here