இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் நேற்று (17) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
5.8 ரிக்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கம் போசோ மாவட்டத்துக்கு வடக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் உருவாகியுள்ளது.
சுமார் 15 தடவைகளுக்கும் மேலாக அதிர்வுகள் ஏற்பட்டதால் அங்குள்ள வீடுகள் சேதமடைந்து 29 பேர் படு காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அப் பகுதி மக்கள் நிலநடுக்கத்தின் காரணமாக மிகவும் அச்சத்தில் உள்ளனர் குறிப்பிடத்தக்கது.