இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த சிவனொளிபாத மலையில் விசேட வேலைத்திட்டம்.

0
170

இலங்கையில் வாழும் மூவின மக்களின் பொது வழிபாட்டுத்தளமாக சிவனொளிபாதமலை காணப்படுகின்றது இதனால் சிவனொளிபாத மலை பருவ காலத்தில் யாத்திரியர்கள் சிவனொளிபாதமலையினை தரிசனம் செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர் இவர்களுக்கிடையே சாந்தி சமாதானம் நல்லிணக்கம் சகவாழ்,சமத்துவம் என்பனவற்றினை ஏற்படுத்துவதற்காக இன்று 19 ம் திகதி விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.மக்களிடையே சமத்துவத்தினையும் சமாதனதினையும் சகவாழ்வினையும் ஏற்படுத்தும் வகையில் நல்லதண்ணீர்; சிவனொளிபாதமலை அடிவாரத்திலிருந்து சமாதானப்விழிமிய பண்புகள் அடங்கிய சுமார் 30 பெயர் பலகைகள் சிவனொளிபாத மலை உச்சிவரை காட்சி படுத்தும் நோக்கில் இன்று ஊன்றி வைக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வு நல்லதண்ணீர் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் சர்வமத வழிபாடுகளுடன் ஆரம்பமாகின.இதன் போது சாந்தி சமாதானம் சகவாழ்வு ஏற்படக்கூடிய விழுமிய பண்புகள் அடங்கிய நூல்கள் மற்றும் கையேடுகள் இதன் போது யாத்திரியர்களுக்கு இலவசமாக பெற்றுக்கொடுக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து சிவனொளிபாத மலை வரை சர்வமத குழுவினரின் பாதயாத்திரையும் இடம்பெற்றது.

தேசிய சதான பேரவையின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் ; ஈரேசா, அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு நுவரெலியா மாவட்ட தேசிய சமாதான பேரவையின் தலைவர்; பிரம்ம ஸ்ரீ கலாநிதி நந்தகுமார் குருக்கள்,ரத்தின தேரர், போதகர் ஜெரி ஆனந்தராஜ்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here