நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சினை எரிபொருள் பிரச்சினை ஒரு வேளையாவது உணவு உண்பதற்கு முடியாத சூழ்நிலை ஏற்பட்ட போது இனியும் எங்களால் வாழ முடியாது. என்ற சுழ்நிலை வந்த பிறகு தான் காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பமானது. என ஐக்கிய சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் சவரியார் ஜேசுதாஸ் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சியில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை (16) மஸ்கெலியா பகுதியில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்;.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தன்னுடைய சுய நலத்திற்காகவோ தன்னுடைய குடும்ப நலத்திற்காகவோ அல்ல ஒட்டு மொத்த மக்களின் எழுச்சியாக இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தின் விளைவாகத்தான் ஏதோ ஒரு வழியில் மக்களின் பொருதாரத்திற்கு சிறிய அளவிலேனும் விடிவு வந்திருக்கிறது.
இந் நிலையில் இன்று உள்ளுராட்சி தேர்தல் வந்திருக்கிறது நாடு முழுவதும் எமது போராட்டக்காரர் குழு போட்டியிடுகிறது.நாங்கள் காலிமுத்திடலில் முன் வைத்த சிஸ்டம் சேன்ஜ் மாற்றத்திற்கான பயணம் என்பதனை கொண்டு வருவதற்காக இன்று எமது கட்சி தயாராக உள்ளது. மாற்றத்திற்கான பயணம் பற்றி அனைவரும் பேசிக்கொண்டிருந்தாலும் அதனை ஒரு போதும் அவர்கள் செய்யப்போவதில்லை.நாங்கள் பிரதேச சபை நகரசபை உள்ளிட்ட அனைத்திலும் நாடு முழுவதும் இந்த மாற்றத்தினை ஏற்படுத்த தயாராக இருக்கின்றோம்.
மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.இந்த கட்சி எந்த ஒரு அரசியல் கட்சியிலும் தொடர்புடையதல்ல ஆனால் ஒரு சில கட்சிகள் தன்னுடைய கட்சியினை பலப்படுத்திக் கொள்வதற்கும் மக்களின் வாக்குகளை தனது சுயநலத்திற்காக ஏமாற்றி பெற்றுக்கொள்வதற்கும் பொய்யான வதந்திகளை பரப்பிக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள் அரசியல் கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் சார்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள் இது எவ்விதத்திலும் உண்மையில்லை. என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.நாங்கள் ஒரு போதும் மக்களின் வாக்குகளை பெற்று எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் விலைபோக மாட்டோம் என்பதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.காலி முகத் திடல் போராட்ட காரர்கள் மக்களால் விரட்டி அடித்த அரசாங்கத்திற்கோ அல்லது இந்த அரசாங்கத்திற்கோ எங்கள் வாக்குகளை கொடுப்பதற்கோ நாங்கள் ஒரு போதும் தயாரில்லை.
அதே நேரம் மக்கள் ஒரு போதும் மறந்து விடக்கூடாது எரிவாயுக்காகவும் மண்ணெண்ணைக்காகவும் வரிசையில் நின்றதனை இதற்கு இதனை இல்லாமல் செய்தது காலி முகத்திடல் போராட்டக்குழுவினர் ஆகவே தான் இன்று நாடு முழுவதும் களமிறங்கியுள்ளது. எனவே அனைவரும் போலி பிரசாரங்களுக்கு ஏமாறாமல் எமது கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்;
மலைவாஞ்ஞன்