இன்று ஆரம்பம் ஆகிய இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர்.

0
199

7 மாத இடைவெளிக்கு பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத்தீவுகள் அணியை இன்றைய தினம் எதிர்கொள்ளவுள்ளது.

அதன்படி இலங்கை – மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, காலி சர்வதேச மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

2023 உலக கிண்ண டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான முதல் படி இதுவாகும்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்புகின்றனர்.

திமுத் கருணாரத்ன, சுரங்கா லக்மால் மற்றும் அஞ்சலோ மெத்யூஸ் ஆகியோருடன் டி-20 உலகக் கிண்ணத்தில் அணியின் ஒரு உறுப்பினராக இருந்த தினேஷ் சந்திமால் போன்றவர்களும் சரித் அசலங்க, பத்தும் நிஸ்ஸங்க மற்றும் துஷ்மந்த சமீர போன்ற இளம் வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான 22 பேர் கொண்ட அணியை இலங்கை அறிவித்த போதிலும், போட்டிக்கு முன்னதாக நேற்று 16 வீரர்கள் மட்டுமே இறுதி பயிற்சி பயிற்சியில் ஈடுபட்டனர்.

மிக்கி ஆர்தரின் தலைமைப் பயிற்சியின் கீழ் இலங்கை விளையாடும் இறுதித் தொடராக இது உள்ளதால், அவரை வெற்றியுடன் வழி அனுப்ப இலங்கை வீரரர்கள் போடுவார்கள்.

அதேநேரம் மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கையில் முதல் டெஸ்ட் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

1980 களில் உலக கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான அணிகளில் ஒன்றாக அறியப்பட்ட மேற்கிந்திய தீவுகள் 1993/94 இல் டெஸ்டில் வெற்றிபெற்று கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடியது.

அதன்பிறகு மேற்கிந்தியத் தீவுகள் இலங்கையில் 11 டெஸ்டில் விளையாடி, ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இது இலங்கையின் முதல் போட்டியாகும், ஆனால் மேற்கிந்திய தீவுகளின் இது இரண்டாவது போட்டியாகும்.

முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாடி, ஒன்றில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது மேற்கிந்தியத்தீவுகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here