இன்று உயிர்த்த ஞாயிறு திருநாள்

0
228

இன்று (09) கிறிஸ்தவர்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு திருநாள்.

பாவத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவதற்காக சிலுவையில் உயிர் தியாகம் செய்து 3 நாட்களுக்குப் பிறகு கடவுளின் மகன் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை கிறிஸ்தவர்கள் இன்று கொண்டாடுகிறார்கள்.

அதன்படி, சனிக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களில் “ஆலே லுய்யா” நள்ளிரவு ஆராதனைகள் நடைபெறவுள்ளதுடன், பிரதான ஆராதனை நேற்று (08) நள்ளிரவு கொட்டாஞ்சேனை புனித லூசியா பேராலயத்தில் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தலைமையில் இடம்பெற்றது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தினத்தினை முன்னிட்டு அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை தீவிரவாத முஸ்லிம் குழுவொன்று நடத்தியதாக கூறப்பட்டாலும், சில அரசியல்வாதிகளின் கூற்றுக்கள் தாக்குதலின் பின்னணியில் அரசியல் கரம் இருப்பதையே பிரதிபலிப்பதாக பேராயர் மக்கள் தொடர்பாடல் பணிப்பாளர் தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினம் குறித்து நேற்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தந்தை ஜூட் கிரிஷாந்த இவ்வாறு தெரிவித்திருந்தார்.

“4 வருடங்களுக்குப் பிறகு, இந்த ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்ததில் கத்தோலிக்க மக்களோ அல்லது இலங்கை மக்களோ திருப்தி அடைய முடியாது.அந்த தாக்குதலுக்கு நீதி வழங்க 3 ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. இதன் பின்னணியில் ஏதோ சதி நடக்கிறது.

யாரோ அதிகாரத்தைப் பெறுவதற்காக இதை எடுத்துச் சென்றனர். முஸ்லிம் தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்ட அரசியல் சாயலில் இது நடந்ததாக கூறப்படுகிறது.

அது மாத்திரமன்றி மைத்திரிபால சிறிசேன கடந்த நாள்… இந்த கோப்பு கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது…அந்த கோப்புகளில் சில இரகசியமான விடயங்கள் உள்ளன… அவற்றை விடுவிக்க கோட்டாபயவிடம் சொல்லுங்கள்.

இதிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது.. இது தீவிரவாத முஸ்லிம்களின் குழுவால் செய்யப்பட்ட செயல் மட்டுமல்ல, அரசியல் கையால் அதிகாரம் பெறுவது அல்லது வேறு ஏதாவது விவகாரம் தொடர்பாக அவர்கள் செய்த செயல்…”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here