கனடாவின் வான்கூவார் தீவுகளின் கரையோரப் பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் 4.3 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாலை 2.04 மணியளவில் இவ்வாறு நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.பிரிட்டிஷ் கொலம்பியாவின் மெக்னில் துறைமுகத்திலிருந்து 181 கிலோ மீற்றர் தொலைவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நில நடுக்கத்தினால் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனவும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.