இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறையும்

0
155

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னர் எரிபொருள் விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலை திருத்த முறையில் இன்னு நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

தற்போது இடம்பெற்று வரும் விசேட ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று நள்ளிரவு முதல்,
பெட்ரோல் ஒக்டேன் 92 – 60 ரூபாவினால் குறைக்கப்பட்டு 340 ரூபாவிற்கும்
பெட்ரோல் ஒக்டேன் 95 – 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 375 ரூபாவிற்கும்
சுப்பர் டீசல் – 45 ரூபாவினாலும்
மண்ணெண்ணெய் – 10 ரூபாவினாலும் குறைக்கப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் திருத்தப்படும் எரிபொருள் விலையே இவ்வாறு முன்கூட்டி திருத்தப்படும் எனவும், இன்று நள்ளிரவு 12 மணி முதல் குறைந்த விலையில் எரிபொருளினை பெற்றுக் கொள்ள முடியும். அதனால் நீண்ட வரிசைகளில் எரிபொருளுக்காக காத்திருக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

அடுத்த விலைத் திருத்தம் எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என்றும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here