இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தம்

0
5

 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் மாணவர்களை தயா்படுத்துதல்  தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பை அழைத்து, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விளம்பரங்கள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், ஆலோசனை வழங்க மாணவர்களை ஒன்று திரட்டுதல் மற்றும் சமூக ஊடக தளங்கள் ஆகியவையும் தடைசெய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விதிகளை மீறும் வகையில் யாராவது செயல்பட்டால், இலங்கை பரீட்சைகள் திணைக்களம் பரீட்சைகள் சட்டம் மற்றும் பிற விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.

பரீட்சையில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் காலை 8.30 மணிக்குள் பரீட்சை மண்டபங்களை அடைய வேண்டும். இரண்டாவது வினாத்தாள் முதலில் நடத்தப்படும், இடைவேளைக்குப் பிறகு முதல் வினாத்தாள் நடத்தப்படும்.

புலமைப்பரிசில் பரீட்சை 2787 பரீட்சை மையங்களில் நடைபெறும். இந்த ஆண்டு, 23,1638 சிங்கள மொழி விண்ணப்பதாரர்கள், 76,313 தமிழ் மொழி விண்ணப்பதாரர்கள் மற்றும் மொத்தம் 30,7959 விண்ணப்பதாரர்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here