இன்று பதவி விலகுவாரா கொழும்பு மேயர்!

0
112

கொழும்பு மாநாகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கட்டமை பேசுபொருளாகியுள்ள நிலையில், அதனை காரணமாக மாநக மேயர் பதவி விலக வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும் முதல் வருடத்தில் இரு தடவைகள் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் மாநகர மேயர் பதவி விலக வேண்டும் என்ற அவசியம் இல்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர் “கொழும்பு மாநகர சபையில் வரவு செலவுத் திட்டம் தேற்கடிக்கப்பட்டதன் பின்னர் விசேட சட்டங்கள் எதுவும் செயல்படாது. குறிப்பாக ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் அதே சட்டம்தான் கொழும்பு மாநகர சபைக்கும் நடைமுறைப்படுத்தப்படும்.

அதன்படி முதல் சுற்றில் வரவுச் செலவுத் திட்டம் தோற்றாலும் இரண்டாவது முறை வரவு செலவுத் திட்டம் தோற்றாலும் நகர சபை முதல்வர் பதவி விலகிச் செல்ல வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. இரண்டாவது வருடத்திலும் வரவு செலவு திட்டம் இதுபோலவே தேற்கடிக்கப்படலாம். அதனால் மேயரின் பதவிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது அவர் பதவி விலக வேண்டிய அவசியமும் இல்லை.

எவ்வாறாயினும் மூன்றாவது வருடத்தில் வரவு செலவுத் திட்டம் தோற்றால் நகர மேயர் மற்றும் தவிசாளர் பதவி விலக வேண்டி வரும். இதற்கு முன்னைய சட்டத்தில் முதல் வருடத்திலேயே மேயர் பதவி விலக வேண்டும் என்ற நிலைமை காணப்பட்டது. ஆனால் புதிய திருத்தச் சட்டத்தின் கீழ் மூன்று வருடங்களின் பின்பே மேயர் அல்லது தவிசாளர் பதவி விலக வேண்டும் என்ற நிலைமை காணப்படுகிறது.

எவ்வாறாயினும், வரவு செலவு திட்டம் வென்றாலும் தோற்றாலும் அந்த வரவு செலவு திட்டத்தை கொண்டு சபையின் நிதி ஏற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதற்கான அதிகாரமும் நகர முதல்வருக்கு உள்ளது.” என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here