இன்று பிற்பகல் பல பிரதேசங்களுக்கு மழை

0
166

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முலத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென் மாகாணம் மற்றும் மேற்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் மேலும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here