இன்று, (20) உலகின் சில பகுதிகளில் மிகவும் அரிதான “ஹைபிரிட்” சூரிய கிரகணத்தைக் கண்டுக்களிக்கலாம்.
சுமார் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வு அவுஸ்திரேலியாவில் இன்று இடம்பெறவுள்ளது.பூரண கிரகணம் 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது. இந்த கிரகணம் குறித்து சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு விளக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த அரிய கிரகண நிகழ்வை நாசா தனது யூடியூப் பக்கத்தில் நேரலையில் ஒளிப்பரப்புகிறது.
இது குறித்து முதன்மை விஞ்ஞானி எபினேசர் கூறியதாவது:-
இன்று (20 ) நடக்கும் பூரண சூரியகிரகணம் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில் வானியற்பியல் விஞ்ஞானிகள் மூலம் விளக்கம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7.30 மணியில் இருந்து 9 மணி வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அடுத்த முழு சூரிய கிரகணம் 2172-ம் ஆண்டுதான் வரும். எனவே பொதுமக்கள் இந்த அரிய நிகழ்வை கண்டு கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
கிரகணத்தின் போது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும். மேலும் சந்திரனின் நிழலின் இருண்ட பகுதியில் உள்ள பூமியின் பகுதிகளில் முழு சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால் சில சமயங்களில், சந்திரன் சூரியனிடமிருந்து வெகு தொலைவில் உள்ளது, எனவே சூரியனை முழுமையாக மறைக்க முடியாது. இது நிகழும்போது, அது வளைய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. குறிப்பாக சூரியக் கிரகணம் நிகழும் போது புதிய சந்திரன் உதயமாவது நியதி.
பூமியின் மேற்பரப்பு வளைந்திருப்பதால், கிரகணங்கள் வளையத்திலிருந்து மொத்தமாகவும் மற்றும் நேர்மாறாகவும் செல்லலாம். இது ஒரு கலப்பின (ஹைபிரிட்) கிரகணம் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இன்று அதற்கு ஒரு உதாரணம்.
நாசாவின் யூடியூப் பக்கத்தில் நாசாவின் சூரிய கிரகணத்தின் நேரடி ஒளிபரப்பு;