ஜனாதிபதி மற்றும் பிரதமரைப் பதவி விலகக் கோரி இன்று நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்ற ஹர்த்தால் போராட்டத்திற்கு நாவலப்பிட்டி நகர வர்த்தகர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நாவலப்பிட்டி நகரில் இன்று பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறந்து இருந்தன.
போக்குவரத்துக்கள் மற்றும் மக்கள் நடமாட்டங்கள் வழமை போல இருந்தன.
மலையகத்தில் பல நகரங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு இன்றைய ஹர்த்தாலுக்கு நகர் வர்த்தகர்கள் ஆதரவு தெரிவித்துள்ள போதும் நாவலப்பிட்டி நகர வர்த்தகர்கள் இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்காமல் அரசியல் ரீதியான அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று பொதுமக்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.