ஒரு மனிதனின் வாழ்க்கை எதிர்காலத்தில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அறிவு எனும் பால் ஊற்றி வளர்ப்பவர்கள் ஆசிரியர்கள். உலகத்தில் அபிவிருத்திக்கும் வெற்றிக்கும் உழைப்பதோடு பலரை உருவாக்கி நாட்டை கல்வியிலும் பொருளாதாரத்திலும் தலைநிமிர வைத்தவர்கள் ஆசிரியர்கள். அவ்வாறான மகத்தானவர்களுக்காக கொண்டாடப்படும் ஆசிரிய தினத்தில் அனைவரும் ஆசிரியர்களை போற்ற வேண்டும் அவர்களை கௌரவப்படுத்த வேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்
ஒரு சமூகம் வெற்றி பெற வேண்டும் கல்வி கற்ற சமூகமாக மாற வேண்டுமென்றால் அதற்கு முழு காரணமும் ஆசிரியர்களே! இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் காலத்திலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பதற்கும் எச்சூழ்நிலையும் கல்வி பாதித்து விடக்கூடாதென செயல்பட்டதை பலரும் அறிந்துள்ளனர்.
பல வருடங்களாக தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். அவர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும்.அதற்கு இறைவன் துணை நிற்க வேண்டும். இன்றைய மாணவர்கள் நாளைய தூண்கள் அந்த தூண்களை வடிவமைப்பது ஆசிரியர்கள் தான்.எனவே மாணவர்களின் கல்விக்காக தம்மை மெழுகாக உருகி தன்னை அர்ப்பணித்து வாழும் ஆசிரியர்களுக்கு இனிய ஆசிரிய தின வாழ்த்துக்கள் என இ.தொ.கா உபச்செயலாளர் சச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்