இன்றைய ராசிபலன் (15.02.2026): சந்தோஷமான செய்தி தேடி வரும் நாள்..!

0
16

மேஷம்

உத்யோகஸ்தர்களுக்கு தாமதமான பணிகள் முடித்துவிடுவீர்கள். பணவரவுக்கு குறைவில்லை. கடன்சுமை குறையும். குடும்பத்தலைவிகளின் ஆசைகள் நிறைவேறும். நண்பர்களின் ஆதரவு மேலோங்கும். மருத்துவர்கள் சாதனைப் படைப்பர். மாணவர்கள் ஆசிரியரிடம் பாராட்டைப் பெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

ரிஷபம்

இன்று திட்டமிட்ட செயல்கள் வெற்றியாகும் நாள். அமைதியான அணுகுமுறை பலன் தரும். வேலை தொடர்பான புதிய பொறுப்பு கிடைக்கலாம். அதிகாரிகளின் நம்பிக்கை அதிகரிக்கும். பணம் வரவு சீராக இருக்கும். செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். சிறிய சளி/காய்ச்சல் ஏற்படலாம். உடல் ஓய்வு அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்

மிதுனம்

இன்று மனக்குழப்பம் நிறைந்த நாளாக மிருகசீரிஷம், திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். காரணம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை

கடகம்

ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். தான தர்ம எண்ணம் உருவாகும். மதியம் பின் நல்ல தகவல் வரும். புதிய திட்டம் தொடங்கலாம். திருமண முயற்சிகள் சாதகமாகும். வியாபாரத்தில் கணக்கில் தெளிவு கிடைக்கும்.காதலர்களுக்கு தாங்கள் விரும்பியவாறே திருமணப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

புதிய வாடிக்கையாளர்கள் சேர வாய்ப்பு. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். மனைவி/கணவர் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். சகோதரர்களுடன் நல்ல தொடர்பு ஏற்படும். பழைய நண்பரை சந்திக்க வாய்ப்பு. பயணம் சற்று தாமதமாகலாம். ஆரோக்கியத்தில் சீரான நிலை இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி

பொறுமையுடன் செயல்படும் நாளாக அமையும். உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களுடன் நல்உறவு ஏற்படும். வியாபாரிகள் புது ஒப்பந்தம் செய்வர். பெண்களுக்கு நல்வரண் கிடைக்கும். இரவில் நீண்ட தூர பயணத்தை தவிர்க்கவும். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

துலாம்

நீண்ட நாட்களாக காத்திருந்த வேலைகள் முடியும். வியாபாரிகள் புதிய கிளைகள் துவங்குவர். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வக் கோயிலை புதுப்பிக்க உதவுவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். சமூகத்தில் மரியாதை கூடும். சிறுதூர பயணம் மேற்கொள்வர். உடல் நலம் சிறக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

விருச்சிகம்

பிள்ளைகளால் பெருமை ஏற்படும். மதியம் பின் மனநிலை மேம்படும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். நிலம் தொடர்பான யோசனை சாதகமாகும். சந்தோஷமான செய்தி தேடி வரும். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். காதல் கண்சிமிட்டும். தூரத்து உறவினர்கள் வந்து போவர். வியாபாரிகளுக்கு லாபம் கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

தனுசு

சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. அவசரமாக எதையும் செய்ய வேண்டாம். நிதானம் தேவை. உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். மார்கெட்டிங்பிரிவினர்களுக்கு பெரிய ஆர்டர்கள் கைக்கு கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். வியாபாரிகளின் நோக்கம் நிறைவேறும். உடல் சம்பந்தப்பட்டவைகளில் சளித் தொந்தரவு வரும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மகரம்

நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உங்களுடைய புதிய வியாபாரச் சிந்தனை நல்ல பலனளிக்கும். வெளியூர் சென்று வருவீர்கள். அந்தப் பயணத்தால் வியாபாரம் விரிவாகும். தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் விசேஷம் நடக்கும். காதலர்களிடையே ஊடல் உண்டாகும். உடல் நலம் சிறப்பாகும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

கும்பம்

புதுமணத் தம்பதிகள் வாழ்க்கை இனிமையாக செல்லும். திட்டமிட்டபடி உல்லாசப் பயணங்கள் மேற்கொள்வர். குடும்பத்தலைவிகளின் தேவைகளை கணவர் பூர்த்தி செய்வார். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பெரியவர்கள் ஆன்மீக பயணம் மேற்கொள்வர். மாணவர்கள் நன்கு படிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மீனம்

உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் ஆலோசனைகளை மேலதிகாரிகள் மதிப்பர். வியாபாரிகள் விற்பனையை அதிகரிக்க விளம்பரம் செய்வீர்கள். நண்பர்களிடையே வாக்குவாதம் வந்து போகும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவர். உடல் நலத்தில் நீர் சத்து குறையும். நீர் குடிப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here