இபோச சாரதி மற்றும் நடத்துனர்மீது கத்திக்குத்து- பதுளையில் சம்பவம்

0
87

பதுளையில் இபோச பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும், நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பதுளையில் இருந்து முத்தேட்டுகமைக்கு செல்லும் தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் அதே பகுதிக்கு செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருக்கிடையில் நேர அட்டவணை தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் கைகலப்பாக மாற, தனியார் பேருந்தின் சாரதி, இபோச பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். காயமடைந்த இருவரும் பதுளை பொது வைத்தியசாலை வாட்டு இலக்கம் 11 இல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த 38, 40 வயதுகளுடைய சொரணாதொட்ட மற்றும் ஹம்பாவெல பகுதியை சேர்ந்த இருவரும் சிகிச்சை பெற்று வருவதோடு, 57,54 வயதுடைய தனியார் பேருந்தின் சாரதியும் நடத்துநரும் பதுளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here