மேலதிக கொடுப்பனவு உள்ளிட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த அனைத்து கொடுப்பனவுகளையும் இடைநிறுத்தியுள்ளதாக நிறுவன முகாமைத்துவம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளின் கூட்டம், தலைவர் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் ஊதியக் குறைப்பை நிறுத்த வேண்டும் அனைத்துக் கொடுப்பனவையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதேவேளை நேற்று முன்தினம் கருத்து தெரிவித்திருந்த வெகுஜன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெரும அரச ஊடகமொன்றை பராமரிக்க மாதமொன்றுக்கு 35 மில்லியன் ரூபா செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும். இதனை விட சில நிறுவனங்களுக்கு 45 மில்லியன் வரை செலவுசெய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.