இயக்குனரும், நடிகருமான ஆர்.என்.ஆர் மனோகர் (61) மாரடைப்பால் காலமானார்.

0
175

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் பணியாற்றி பிரபலமானவர் R.N.R.மனோகர்.

ஆர்.என்.ஆர். மனோகர் இயக்கத்தில் மாசிலாமணி, வேலூர் மாவட்டம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் மிருதன், ஈட்டி, கைதி, விஸ்வாசம் என பல திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

மேலும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் R. N. R. மனோகர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது R.N.R.மனோகர் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here